பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. பொறுமை ... யாராவது உங்கள் முன்னிலையில் உங்களை நிந்தித்தாலும், கை முஷ்டியால் உங்களை அடித்தாலும், உங்கள் மீது களிமண் உருண்டைகளை எறிந்தாலும், கழியால் உங்களைத் தாக்கினாலும், அல்லது வாளால் உங்களை வெட்டினாலும் . அப்பொழுதுகூட நீங்கள் அவரைப்பற்றி வெறுப்படையக்கூடாது: "என் இதயம் நிதானம் தவறாதிருக்கும், வெறுப்படையாதிருக்கும். நான் துவேஷமான சொல் எதுவும் கூறமாட்டேன். நான் எல்லோரையும் நேசித்துக்கொண்டு, அன்போடு அவர்களுடன் வாழ்ந்து வருவேன்' என்று சொல்வதற்கு நீங்கள் உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ' ப. ராமஸ்வாமி | 33