பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திபேத்து எல்லையை வரையறுத்துள்ளது. படத்தில் வரையப்பட்டதோடு, இந்த எல்லைக்கோடு 1895-இல் தரையிலும் குறிக்கப்பட்டது. இந்த எல்லை பற்றித் தகராறில்லை யென்று 1959, டிசம்பர் 26-ந் தேதி அனுப்பிய குறிப்பு ஒன்றிலும் சீன ஒப்புக்கொண்டிருக்கிறது.

சிக்கிமில் இப்போதுள்ள மகாராஜா பால்டன் தொண்டுப் நம்கியால். அவருக்கு 1965, ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முடிசூட்டு விழா நடந்தது. அப்பொழுதும் அவர் இந்தியாவின் நட்பால் சிக்கிம் சேமமாயுள்ளது என்று கூறினர். அவருக்கு வயது 42.

பூட்டான்

சிக்கிமுக்குக் கிழக்கே அடுத்திருக்கும் இராஜ்யம் பூட்டான். இது 18,000 சதுர மைல் அளவுள்ள நாடு. இங்கு வளம் மிகுந்த வனங்கள் ஏராளம். ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கிறார்கள். நாட்டை ஆள்பவர் மகாராஜா. மக்களிற் பெரும்பாலோர் பெளத்தர்கள். பிரிட்டிஷார் காலத்திலிருந்தே பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அத்தொடர்பு இப்பொழுது நீடித்திருக்கிறது. 1949-இல் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, பூட்டானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியப் பேரரசு தலையிடாமல், வெளிவிவகாரங்களை மட்டும் கவனித்து ஆலோசனே கூறிவருகின்றது. காங்டோக்கிலுள்ள இந்தியப் பிரதிநிதியே பூட்டானையும் கவனித்துக் கொள்கிறார். இந்தியாவுடன் பூட்டானின் வர்த்தகம் அதிகம். கஸ்துாரி, அரக்கு, மெழுகு முதலியவை அங்கிருந்து ஏராளமாக வெளியே அனுப்பப் பெறுகின்றன. மற்ற இமயப் பிரதேசங்களைப் போல, அங்கும் சடைமாடுகளான

25