பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமாதான முறையில் பெற முடியாது, பலாத்கார மாகவே பறித்துக்கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட் சீன அரசாங்கம் கருதியிருக்க வேண்டும்.

2. எல்லைத் தகராறுகளின் பெயரால் போரைத் தொடங்கி, மேற்கே காஷ்மீரையும், தெற்கில் நேப்பாளம், பூட்டானையும், கிழக்கில் அஸ்லாமையும் பிடித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் வட பகுதிகளைத் தன்வசம் வைத்துக் கொண்டால், சீன இந்தியாவுக்கு மட்டுமன்றி, வடக்கே தொலைவிலுள்ள ரஷ்யாவுக்கும் எச்சரிக்கையாயிருக்கும். சீனாவுக்கு நம்மிடம் தகராறு இருப்பது போல், அதற்கு ரஷ்யாவிடத்திலும் தகராறு உண்டு. மேலும் சீனவுக்குத் தேவையான பெட்ரோல் முதலியயாவும் ரஷ்யாவிலிருந்தே கிடைக்க வேண்டியிருந்தன. தனக்கென்று பெட்ரோல் முதலியவை இல்லாமல் சீனா எதிலும் முன்னேற முடியாது; போரும் செய்ய முடியாது. இதே நிலையில் தான் முன்பு ஜெர்மனியும் இருந்தது. அதனிடம் பெட்ரோலும், ரப்பரும் இல்லை. ஆயினும் மூர்க்கமாக இரண்டாவது உலகப் போரை அது தொடங்கி நடத்தி வந்தது. சிறந்த விஞ்ஞானிகளைக் கொண்டு செயற்கையாக ரப்பரையும், பெட்ரோலையும் உண்டாக்கி அது பயன்படுத்திக் கொண்டது. சீனவில் அத்தகைய விஞ்ஞானிகள் இல்லை. ஆகவே அஸ்ஸாமிலுள்ள எண்ணெய்க் கிணறுகளின் மீது அதற்கு ஆசையிருக்கும். அஸ்ஸாமைப் பிடித்த பிறகு, வசதி வாய்ந்த போது, தன் விருப்பப்படி, பர்மாவைச் சுண்டைக் காயைப் போல் ஒரே கடியில் விழுங்கி விடலாம். அதன்பின் காஷ்மீரிலிருந்து பர்மா, தாய்லாந்து, வியட்னாம், மலாய், இந்தோனீஷியத் தீவுகள் வரை சீனா தன் ஆதிக்கியத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அந்நிலையில் ஸோவியத் ரஷ்யாவும் அதன்

55