பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெற்றவர். ஆயினும் அவருக்குப் பொதுவுடைமையில் பற்றில்லை. சமயம் நேர்ந்த போதெல்லாம் சீனாவை எதிர்த்து வந்த ஜப்பானியரைவிட அவருக்குச் சீனக் கம்யூனிஸ்டுகளிடமே துவேஷம் அதிகம். ‘ஜப்பானியர் தோலின்மேல் தொற்றியுள்ள வியாதி; கம்யூ னிஸ்டுகள் இதயத்தைப் பீடிக்கும் வியாதி’ என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு.

சீனப் பெரு நாட்டை நவீன முறையில் திருத்தியமைத்தல் எளிய காரியமன்று. எனினும் கோமிண்டாங் கட்சி, சாலைகள் அமைத்தும், பாசனத் திட்டங்களே நிறைவேற்றியும், வேளாண்மையைச் சீர்திருத்தியும், மத்திய அரசாங்கத்தின் வல்லமையைப் பெருக்கியும், பெரிய அளவில் வேலை செய்துவந்தது. ஆனால் அக்கட்சியை ஆதரித்து வந்த பலர், பெருஞ்செல்வர்களாயும், மக்களின் பகைவர்களாயும் இருந்தனர். பிரபுக்கள், பண்ணையார்களின் பிடியிலிருந்து விடுதலை கிடைக்காமல், குடியானவர்கள் திணறிக் கொண்டிருந்தார்கள் .

சீன-ஜப்பானியப் போர்

சீனக்கம்யூனிஸ்டுகள் கோமிண்டாங்குடன் இணைந்தும், சில சமயங்களில் அதை எதிர்த்தும், நாளடைவில் வலிமையுள்ள கட்சியினராக விளங்கி வந்தனர். அவர்களுக்கும் கோமிண்டாங்கின் தேசியவாதிகளுக்கும் பிணக்கு முற்றிக்கொண்டிருந்தது. இரு திறத்தாருக்கும் உள்நாட்டுப் போர் மூளும் நிலையில் 1931இல் ஜப்பான் சீனாவுக்குச் சொந்தமான 4 லட்சம் சதுர மைல் பரப்புள்ள மஞ்சூரியாவைக் கைப்பற்றி, அங்கே ஒரு பொம்மை அரசை நிறுவிக்கொண்டிருந்தது. அங்கிருந்த 8 கோடி ஏக்கர் விளை நிலங்களும் ஜனப்பெருக்கத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஜப்பானிய

இ. சீ. பா.—9

129