பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





  • சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த

முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே. ைநீதி வெண்பா அடிக்கடி மாறுதல்

  • உண்மையான குற்றங்கள் என்று கருத முடியாதவைகளில், அடிக்கடி மாறும் இயல்பைப் போல், ஒரு மனிதனை அருவருக்கத்தக்கவனாயும். உலகோர் அற்பனாயும் கருதும் படி செய்வது வேறு எதுவுமில்லை. முக்கியமாகச் சமய மாறுதலோ கட்சி மாறுதலோ இத்தகையது. இந்த இரண்டு விஷயங்களிலும் ஒரு மனிதன் தான் மாறுவது கடமை என்று உணர்ந்த போதிலும், அவன் விட்டுப் பிரியும் பழைய நண்பர்கள் அவனை வெறுப்பார்கள். அவன் போய்ச் சேரும் புதிய நண்பர்களும் அவனை ஆர்வத்துடன் வரவேற்ப தில்லை. அ அடிஸன்
  • கடிகாரங்கள் நாம் திருப்பிவைக்கிற நிலையில் முறையாக ஒடிக்கொண்டிருக்கும்; ஆனால், மனிதன் முறையற்ற மனிதன். ஒரு போதும் நிலையாக நிற்பதில்லை. ஒருபோதும் உறுதி கொள்வதில்லை. க ஒட்வே
  • மனிதன் மட்டும் நிலையாக நிற்பானானால், அவன் பூரண ஒழுங்குள்ளவனாவான். அவ்வாறு நிற்காததால், அந்த ஒரு தவறு அவனிடம் பல குறைகளைச் சேர்த்துவிடுகின்றது: அவனைப் பல கபாவங்களுக்கு உள்ளாக்குகின்றது.
ைஷேக்ஸ்பியர் * வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்.
ைதிருவள்ளுவர்

அடிமைத்தனம்

  • மனிதனை எது அடிமையாக்குகின்றதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்துவிடுகின்றது. ைபோப்