பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«ν. ψιτωρωινωνιαί' ፥፥፡ 131 = உடலையும் ஆவியையும் வேலைக்கே அர்ப்பணம் செய்கிறானோ. அவனே வெற்றியாளன். சார்லஸ் பக்ஸ்டன்

  • உண்மையான உள்ளுக்கத்தின் புனித ஆர்வத்தைவிட நேர்த் தியானதும் பெருமை மிக்கதும் எதுவுமில்லை. மோலியர்

உறக்கம்

  • பகல் முழுவதும் வீணாக அலைந்து திரிந்தபின், உறக்கம் மறு நாள் காலைக்காக நம்மை ஓய்வெடுக்கச் செய்கின்றது.அ யங்
  • நடுநிசிக்கு முன்பு ஒரு மணி நேர உறக்கம். பின்னால் இரண்டு மணி நேரம் உறங்குவதற்கு ஈடாகும். அ ஃபீல்டிங்
  • மென்மையான உறக்கம் மரணத்தின் போலிஅ ஷேக்ஸ்பியர்
  • துயில்தான் நமது வளர்ப்புத்தாய். அ ஷேக்ஸ்பியர்
  • களைப்பு. கல்லின் மேலும் குறட்டை விடும். அமைதியில்லாத சோம்பலுக்குத் தண்டனையும் உறுத்தும். அ ஷேக்ஸ்பியர்
  • உறக்கமே! வீடற்றவர்களுக்கு நீதான் வீடு; நண்பரற்றவர்கள்

உன்னையே நண்பனாகக் கொள்கின்றனர். க. இ. எலியட்

  • வேதனைக்கு எளிதான மருந்து தூக்கம். அது மரணத்தைப்

போல எல்லாவற்றையும் செய்யும், ஆனால், கொல்லாது. - டோன்

  • ஒய்வு எவ்வளவு இன்பமான விஷயம் கட்டிலே எனக்குச் சொகுசாக உள்ளது. உலகிலுள்ள மகுடங்கள் எல்லாம் கிடைப்பதாயினும், இதை அவைகளுக்கு ஈடாகக் கொடுக்க மாட்டேன். ைநெப்போலியன்

முன்னதாகப் படுத்து. முன்னதாக எழுந்தால், மனிதனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். அ ஃபிராங்க்லின்