உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தயா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4s. தயா பாட்டுக் கொண்டு சுண்ணாம்பை வாயில் அண்டி யறிந்து விட்டுத் தூணில் விரல்ைத் துடைத்துக் கொண்டு. சப்பாத்திப்பூ போன்ற செவ்வாயைத் திறந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாள், அப்புறம் ஒரிரவு நேரங்கழித்து எங்கிருந்தோ வீட்டுக்குத் திரும்புகையில், யாரோ ஒருத்தி வெள்ளை ரவிக்கையும் வெள்ளைப் புடைவையும் கொண்டையில் கொத்துப் பூவும் அணிந்துகொண்டு, தெருவில் ராந்தல் கம்பத்தின் மேல் சாய்ந்த வண்ணம் ஏன்னா அய்யரே, ரொம்ப வேகமாப் போறே?' என்று கேட்டாள். அவன் லஜ்ஜையும் பயமு மடைந்து ஒட்டமாய் நடந்தான். ஆனால் அவளுடைய சிரிப்பின் ஒலி அவனை வெகுநாள் துரத்திக் கொண் டிருந்தது, ஆதாரமும் தொடர்புமற்று மனத்தில் நாளடைவில் ஆங்காங்கு தங்கிப் போன அழுக்குகள்தாம். ஆயினும் அத்த னையும் இப்பொழுது எப்படியோ புத்துயிர்களும், அர்த்தங் சளும் தாங்கிக் கொண்டு எழுந்தன. ஆம். இவர்களில் எவளேனும் ஏன் இருக்கக் கூடாது? அவளுடன் 'ஏன் வாயடைச்சுப் போச்சு? புருஷாளே இப்படித் தானா?”அவள் போட்ட கத்தலில் அவனுக்கு மண்டை திகு திகுவென எரிந்தது. 'நீ நினைக்கிறபடி இல்லை. சாரூர் நான் உனக்குத் துரோகம் பண்ணவில்லை. இல்லை சத்தியமாய்ப் பண்ண வில்லை' 'பின்னே ஏன் என்னை விட்டுப் போகணும்?” 'மறுபடியும் அதே சுங்கஞ்சாவடிக்குத்தான் வரு கிறோம்!" அவளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/46&oldid=886345" இலிருந்து மீள்விக்கப்பட்டது