உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தயா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போங்கோ இங்கே விட்டு சிறி விழுந்தாள், 'அனா வசியமா மனசு நிம்மதியைக் கலைச்சுண்டு...” 'இல்லை சாரு நான் சொல்வதை-' போங்கோன்னா, போங்கோ’ அவள் வெறி பிடித்துக் கத்தினாள். அவன் விசனத்துடன் எழுந்தான். "நான் பாடணும். எனக்கு மனசு சரியாயில்லே.” அவள் இப்பொழுது குன்றிப் போயிருந்த நிலையில் உடலே திடீரெனச் சிறுத்துவிட்டது போலிருந்தாள். தம்பூரிலிருந்து விடுபட்ட சுருதி பாம்பு போல் சீறிக் கொண்டே வந்து அவனைத் துரத்திற்று, மாடிக்கு வந்து நின்றான், வானைத் தக்கையாயடைத்துக் கொண்டிருந்த மேகங்கள் பாறை பாறையாய் உடைந்து, அவைகளிடையில் நிலவு தெளிவாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. தன்னறைக்குப் போய்க் கட்டிலின் மேல் தடாலென விழுந்தாள். கட்டிலின் ஸ்பிரிங்குகள் கிறிச்சிட்டன. கண்கள் மூடிக் கொண்டன. ஆனால் தூக்கம் வர வில்லை. இமைகளுக்கிடையில் விழிகள் விதைகளாய் விழித்துக் கொண்டிருந்தன. இத்தனை நாட்களாய் அவனை அமுக்கிக் கொண்டிருந்த எதனினின்றோ விடுபட்டு, இறக்கை முளைத்த குதிரைமேல் வேகமாய் எங்கோ போய்க் கொண்டிருந்தான், வானில் உடைந்து கிடந்த மேகப் பாறைகள் மீது குளம்புகள் தாளம் போட்டுக்கொண்டு தாண்டி தாவிச் செல்கையில், அவற்றின் லாடங்களிலிருந்து நீலப் பொறிகள் பறந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/47&oldid=886346" இலிருந்து மீள்விக்கப்பட்டது