பக்கம்:உத்திராயணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻罗 லா, ச. ராமாமிருதம்

நுழைந்து அந்தப் புழக்கடை வழி அடுத்த தெரு, மறுபடியும் இன்னொரு புழக்கடை, இன்னொரு தெரு அப்படி, இப்படி அங்கே திரும்பி இங்கே திரும்பி, குமரன் கோவிலுக்கு வந்து கதவா, மண்ணா-மண்டபத்தில் உட்கார்ந்துவிட்டான். மூச்சு வாங்க யோசிக்கக் கொஞ்ச நேரம் வேண்டாமா?

கூனப்ப முதலி வீட்டில், அவன் திரும்புவதற்காகக் காத் திருப்பவள் சற்று நேரம் சுவரில் காலண்டர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், அப்பவே காலண்டர்களில் ஸ்டார்கள், சுவாமிகள் இடத்தைப் பிடிக்க ஆரம்பிச்சாச்சு.

வாசலில் பெண்கள் குரல் கேட்கவும் உக்கிராண உள்ளில் ஒடி, பழைய ப்ரகாரம் அரிசிப் பானைக்குள் புகுந்து கொண்டாள்,

மறுநாள் விடிகாலை யாரோ குமரன் கோவில் கிணற்றில் ஜலம் மொள்ள வந்தபோது கூனப்ப முதலி வெற்றியுடன் இளித்தபடி கிணற்றில் மிதந்து கொண்டிருந்தான்.

இரவில் யாரும் தேடவில்லையா என்று கேட்கிறாயா? அதெல்லாம் அந்தக் காலம். .

கிழம் எங்கானும் இன்னொரு கிழத்தோடு பேசப் போய் அப்படியே திண்ணையிலே முடங்கியிருக்கும்.'

அரைகுறை அவனைத் தேடியிருக்கக் கூடியவளைத் தான்-வையறத்துக்கானும் அவளுக்கு ஆள் வேனும்: எப்பவோ கட்டின தாலியும் மஞ்சளுமாய் உச்சிவேளைக்குக் கொண்டுபோய் பாலாற்றங்கரை மணலில் வெச்சாச்சே!'

- ಹತ್ತು சற்று ஏமாந்திருந்தால், உயிரோடவா?" என்று கேட்கும்படியிருந்தது குருக்கள் சொன்ன விதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/42&oldid=544131" இலிருந்து மீள்விக்கப்பட்டது