உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 லா. ச. ராமாமிருதம்

பந்து பந்தாய் சடைத்துச் சொம்பளவு இரத்தப் பூக்கள் முகத்தைச் சூழ்ந்து தவழ்ந்தன. காலை வெய்யிலில் தாடி முட்கள் பொன்னாய் மின்னின. சிற்றலைகள் முகத்தைக் கழுவின. . மூலத் துயிலில் தாண்டவ கோலத்தில் மூழ்கி விட்ட செஞ்சடாதரன். -

素 தெருவிளக்கு அணைந்ததுதான் கார ண ઉં Lo rr என்னவோ, நள்ளிரவில் திடுக்கென விழித்துக் கொண் டேன். என் உருவக்கோடுகூட எனக்கிலாதபடி என்னையும், தன்னோடு இழைத்துக் கொண்டது போல் எனைச் சூழ்ந்த மையிருளில் விழித்திரையில் சிவப்பு நுரை துக்கிக்கொண்டு பெருக்கெடுத்து அறை புரண்டது. சிவப்பை விடச் செந்தூரம் எனில் தகும். கைக்குப் பட்டாலன்றி இருக்குமிடம் தெரியாமல் தாதுவில் மிதந்து கொண்டிருந்தால் உயிர். -

" அப்பனே தீர்க்காயுசாயிரு” என்று அயிலாண்டப் பாட்டிகள் வாயார வாழ்த்த வழி. -

வெள்ளமாய்ப் புரண்டு விட்டாலோ: 'போயும் போயும் இப்படியா போகனும்! நாலு: நாள் கிடந்து போனான்னு வயத்தெரிச்சல் தீரக்கூட வழியில்லையே. நாங்கள் கிழங்கள். இன்னும் கிழங்கா வளைய வரோமே, இந்தக் கொடுமையெல்லாம் பார்க் கனும் கேட்கணும்னு இன்னும் எங்கள் தலையில் என் னென்ன எழுதி வெச்சிருக்கோன்னு தலையிலடித்துக் கொள்ள விஷயமா ச்சு. .

ஆனால் இன்று செத்துப்போனவன் சின்ன வயது இல்லை. ரயில் தள்ளிவிட்டது. அறியக்கூட அவனுக்கு நேரமிருந்திருக்காது. இல்லாவிடில் முகத்தில் எப்படி அத்தனை சாந்தம் ! உதட்டோரம் சிறு முறுவலின் முன் நிழல் கூட. இன்பம் தந்த ஏதோ ஞாபகத்தில் தன்னை ந்ேது வன்டி வந்த்துகூடத் தெரியாமல், பாலம்