பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷筠 பார்க்கவி வர் வெளியே வரவேயில்லை. ஒரு மாஸம் இரண்டு மாஸம் கழித்து ஒரு கடிதம்தான் வந்தது. உங்கள் கணவர் திடீ ரென கேற்றிரவு சிறையில் காலமாய் விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்'. இல்லியா, அப்பா அடிக்கடி சொல்லுவா, இங்கிலிஷ் பாகையில் பதவிசுக்குக் கேட்கணுமா? அதுதான் பாகா இழுபடுமே!’ என்று. அம்மாவுக்கு ஒரே ஆத்திரம். கொண்ட பெண் டாட்டியையும் பெத்த குழந்தையையும் மானத்தோட காப்பாத்த வக்கில்லாதவாளுக்குத் தேசத்தொண்டு என்ன வேண்டிக் கிடக்கு தன்னைக் காப்பாத்திக்க வழியில்லை, தேசத்தைக் காப்பாத்தப் போனானாம். போனானே, போனானே, என்னை நடுச்சந்தியிலே கிக்கவிட்டுட்டு என் வயிறு எரியக் கண்டவாளெல்லாம் விடிஞ்சுடுவாளா?” ஆயிரம் கத்தியும் வயத்தில் அறைஞ்சுண்டும் என்ன பண்றது? சகுந்தலை மாதிரி குழந்தையை ஏந்திண்டு பிரிஞ்ச இடத்திலேயே சேரும்படி ஆயிடுத்து. போன இடத் தில் இடிக்காமல் யார் விடறா? நீ வெச்சுக்கோ நான் மாட்டேன் வேங்கைப்புலி' என்று ஏலம்போட ஆரம் பித்துவிட்டார்கள். இப்போதுகூட கினைச்சுண்டு அம்மா ஆத்திரத்தில் அழுவர். அம்மாவுக்கு முனு ஒர்ப்படிகளாம். அஃகன்னா மாதிரி மூன்று பேரும் கொல்லை ரேழியில் உட்காந்திண்டு அம்மா முன்னும் பின்னுமாய்க் காரியமாய் கடமாடுகையில், அவளைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரிச்சுண்டே கும்மி படிபபார்களாம. ஒருத்தி : போன மச்சான்-’ என்பாள். இன்னொருத்தி: (பிராசம் கெடாமல்) திரும்பி வந்தான்!”