பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர், ச, ர்ா. If 5 கேட்காதேயுங்கள். இப்போ கான் சொல்லப்போவதைத் தைரியமாகத்தான் சொல்லவேணும். நீங்கள் எங்கேயோ காம்ப்' என்று தாரதேசம் போய் விட்டீர்கள். இந்த கிமிஷம் எந்த ஊரில், எந்த ஹோட்டலில், சத்திரத்தில், எந்தக் கூரையை அண்ணாந்து பார்த்தபடி என்ன யோசனை பண்ணுகிறீர்களோ? நானும் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு எதுவும் நேராது என்று என்ன ரிச்சயம்? கினைக்கக் கூட நெஞ்சு கூசினாலும், கினைக்கதான் செய்கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்தந்த காள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், கம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையி லும், மூச்சிலும் தாழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, கினைவின் பொக்கிஷமாய்த்தான் தோன்று கிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவைகளை கம்பிக் கொண்டிருப்பதி லும்தான் உயிர் வாழ்கிறோம். என் தகப்பனாருக்கு வாசலில் யாராவது வயதானவர்கள் போனால், அவரை அறியாமலே அவர் கைகள் கூம்பும். "என்னப்பா?” என்று கேட்டால் சொல்வார், அம்மா இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு கிச்சயமில்லை. காலமோ அல்பாயுசுக் காலமாயிருக்கிறது. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும் வயசையும் இவர்கள் ஐயம் கண்ட மாதிரி தானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்கு கிறேன். அவர் வேணுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில் ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.