உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

85



மொழியிறுதி எழுத்துக்கள்

   மொழிக்கீறாம் எழுத்துக்களையும் அவற்றது வரையறை யையும் 69. முதல் 87 வரையுள்ள சூத்திரங்களால் தொல்காப்பியர் உணர்த்துகின்றார்.
   உயிர் ஒள வெஞ்சிய விறுதி யாகும். (தொல். 69)

   இஃது, உயிர் மொழிக்கு ஈறாமாறு உணர்த்துகின்றது. 
  (இ-ள்) உயிர்களுள் ஒளகாரம் ஒழிந்தனவெல்லாம் மொழிக்கு ஈறாம்.

(உ-ம்) பல, பலா, கிளி, குரீ, கடு, து, சேன, நே, பனை, ஒஒ, போ எனவரும்,

     கவவோ டியையின் ஒளவு மாகும். (தொல். 70) 

இ-ள்) முன் ஈறாகாதென்ற ஒளகாரமும் ககர வகரத்தோடு இயைந்தவழி ஈறாம்.

   (உ-ம்; கெள, வெள எனவரும்.
        எ, என வருமுயிர் மெய்யீ றாகாது.   (தொல். 71) 
   (இ-ள்)  எ என்று கூறப்படும் உயிர் தானே ஈறாவதன்றி யாண்டும் மெய்களோடு இயைந்து ஈறாகாது.
     ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. (தொல். 72; 
   (இ-ள்) ஒகரமும் நகரவொற்றோ டல்லாத விடத்து முன் சொன்ன எகரம்போலத் தானே ஈறாவதன்றி மெய்களோடு இயைந்து ஈறாகாது. எனவே நகரத்தோடு ஈறாமென்பது பெற்றாம்.
   (உ-ம்) நொ அலையல் நின்னாட்டை நீ எனவரும்.
     ஏ ஒ எனுமுயிர் ஞகாரத் தில்லை. (தொல். 73) 

(இ-ள்) ஏ, ஓ, என்று கூறப்பட்ட இரண்டுயிரும் தாமே நின்றும் பிற மெய்களோடு கூடியும் ஈறாவதன்றி ஞகரத்தோடு ஈறாதலில்லை.

     உ, ஊ கார நவவொடு நவிலா. (தொல். 74) 
   உரையாசிரியர் இருவரும் உகர ஊகாரங்களாகிய இரண்டும் நகர வகர வொற்றொடு ஈறாகா என்று கூறி, நவிலா என்றதனால் வகரவொற்றொடு உகரமீறாதலைத் தழுவுவர். நவவொடு என்பதனை நவ்வொடு என்பதன் புள்ளி நீக்கி எழுதப்பட்டதெனக் கொண்டு உகர ஊகார மிரண்டும்