52
தொல்காப்பியம்-நன்னூல்
சொற்களை வினாவீெனத் தழுவினார் (எழுத்து 159, 334). இவை சொன்னிலைமைப்பட்டு வினாப்பொருளுணர்த்தி நிற்றலின் எழுத்தாம் நிலைமையில் நின்று ஈண்டுப் புணர்ச்சிக்கட்படும் ஈற்று வினாவாகிய ஆ, ஏ, ஓ, என்றவற்றுள் இயைத்துரைக்கப் படாலாவின.
“ஒன்றறிசொன்முன் யாதென் வினாவிடை’ (தொல். 172 “யாவென்வினாவு மாயியல் திரியாது” (தொல். 175)
“யாவென் வினாவி னையெனிறுதி” (தொல். 178)
என இவ்வதிகாரத்தும் வினாவெனக்கொண்டு, யாவன், யாவள், யாவர், யா, யாவை எனப் பெயரியற்கண்ணும்,
யாஅ ரென்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே (தொல்-வினை.13)
அத்தினை மருங்கி னிருபாற் கிளவிக்கும் ஒக்குமென்ப எவனென் வினாவே. (தொல்-வினை. 22)
என வினையியற்கண்ணும் எடுத்துரைத்தமையால் வினாச் சொல்லை வினாப்பெயர், வினா வினைக்குறிப்பு என இருவகைப் படுத்தினாரென்பதறியலாம். ஈண்டுக் குறிப்பிட்ட ஆ, ஏ, ஓ மூன்றும் இருதிணையைம்பாற் பெயரிறுதிகளோடுஞ் சேர்ந்து வினாப் பொருளுணர்த்தி நிற்றலும், சொன்னிலைப் பட்டுவரும் யாவன் முதலிய பெயரும், வினாவினைக்குறிப்பும் அவ்விருதினையுள் ஒன்றாய் ஒருபாற் பொருளின்கண் நிற்றலுங் கொண்டு, இவை பொருளானும் வேறுபாடுடைய என்பது அறியப்படும். இனி எவ்வயின் எதோளி முதலியவை எகரத்தை முதலாகக் கொண்டு வரினும் வயின் என்னும் சொல்லும் இகர விகுதியும் பெற்று ஒரு சொல்லாய் நின்று இடப்பொருளுணர்த்தி வினாவாய் வருதலின் இடைச்சொல்லாயின.
இனி இளம்பூரணர் இச் சூத்திரத்தில் “தன்னின முடித்தல் என்பதனால் எகரமும் யகர ஆகாரமும் வினாப்பெறுமெனக் கொள்க’ எனத் தழுவிக்கொண்டார். இக்கருத்தேபற்றி நன்னூலாரும்,
எ, யா, முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே, (நன். 87)
எனச் சூத்திரஞ் செய்தனர்.