இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
196
தொல்காப்பியம்-நன்னூல்
இனி ரகாரவீற்றுள் ஆர், வெதிர், சார், பீர் என்ற சொற் களும், ழகாரவீற்றுள் மரப்பெயராகிய குமிழ் என்ற சொல்லும் வல்லெழுத்து வருவழி அவற்றின் கிளையெழுத்தாகிய மெல்லெழுத்து மிக்கு முடிவனவாம்.
இவற்றின் இயல்பினை,
ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும். (தொல்.363)
குமிழென் கிளவி மரப்பெய ராயிற் பிரென் கிளவியொ டோரியற் றாகும். (தொல்.385)
எனவரும் சூத்திரங்களால் உணர்த்துவர் தொல்காப்பியர்.
(உ-ம்) ஆர் + கோடு = ஆர்ங்கோடு, செதிள், தோல், பூ
வெதிர் + ‘ = வெதிர்ங்கோடு, சார் ‘ = சார்ங்கோடு பீர் + = பீர்ங்கொடி குமிழ் + = குமிழ்ங்கோடு
இனி, யகர வீற்றுள் வேற்றுமைக்கண் வருமொழி வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து முடியும் மொழிகள் சில உள என்பதனை,
மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. (தொல்.360)
என்பதனால் உணர்த்தினார்.
(உ-ம் வேய் + குறை = வேய்க்குறை செய்கை, தலை, புறம் வேய் + குறை = வேய்ங்குறை ”
ரகரவீற்றுள் மெல்லெழுத்து மிகுமெனக் குறிப்பிட்ட மொழிகளுள் சார் என்பது நிலைமொழியாய் நின்று காழ் என்பதனோடு புணருமிடத்து முற்கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,
சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும் (தொல்.364)
என்பதனால் உணர்த்தப்பட்டது.
(உ-ம்) சார் காழ் = சார்க்காழ் எனவரும்.
ழகரவிற்றுள் பாழ்’ என்னுஞ் சொல்முன் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து வந்த வல்லெழுத்தினோடு அதன் கிளை யொற்றாகிய மெல்லெழுத்தும் பெற்று உறழ்ந்து முடியும் என்பது,