இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
144
தொல்காப்பியம்-நன்னூல்
(இ-ன் நெடுமுதல் குறுகாத இயற்கைப் பெயராகிய நும் என்னும் மகரவீறும் முற்கூறிய குற்றொற்று இரட்டாமையும் ஈறாகு புள்ளி அகரமொடு நிலையலும் ஆகிய இயல்பினைப் பெறும் எ-து.
(உ-ம்) நுமது, துமக்கு எனவரும்.
உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமும் உயிரும் வருவழி இயற்கை. (தொல், 163)
இது, புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.
(இ-ள்) உகரப் பெற்றோடு புணரும் புள்ளியிறுகள், யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெறாது இயல்பாய் முடியுமென்பதாம்.
அவ்வீறுகளாவன பின் புள்ளி மயங்கியலுள் உகரம் பெறுமென்று விதிக்கும் பல ஈறுகளுமாம்.
(உ-ம் உரிஞ் யானா, அனந்தா, எனவும் பொருந்யானா, அனந்தா எனவும் வரும்.
உயிரும் புள்ளியு மிறுதி யாகி அளவு நிறைய மெண்ணுஞ் சுட்டி உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த வென்ப ஏயென் சாரியை. (தொல்.164)
இஃது அளவு, நிறை, எண்ணுப் பெயர்கள் தம்முள் புணருமாறு கூறுகின்றது.
(இ-ள்) உயிரும் புள்ளியுந் தமக்கு ஈறாய் அளவையும் நிறையையும் எண்ணையும் கருதி வருவன வுளவென்று கூறப்பட்ட எல்லாச் சொற்களும், தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த அளவுணர்த்துஞ் சொற்கள் தம் முன்னே வருங்காலத் தோன்றில், ஏயென் சாரியை பெற்று முடிதலைப் பொருந்து மென்பர் ஆசிரியர்.
முந்தை முத்தை யெனத் திரிந்து நின்றது.
(உ-ம்) நாழியே யாழாக்கு. கலனே பதக்கு இவை அளவுப் பெயர். தொடியே கஃசு, கொள்ளே யையவி இவை நிறைப்பெயர். ஒன்றே கால், காலே காணி இவை எண்ணுப் பெயர்.