இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
266
கவரப்பெற்ற வெள்ளைவாரணனாரைத் திருப்பெருந்துறை யிலுள்ள தேவாரப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு இவருக்கு ஆசிரியராய் இருந்தவர் காஞ்சிபுரம் பூசை நமச்சிவாய முதலியார். அங்கு தமிழிலக்கியம், இசைப் பயிற்சி போன்றவற்றைக் கற்றுவந்தார்.
1930ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து கல்வி பயின்றார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் இருந்தவர், அறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. 1931 முதல் 1933 வரை விபுலாநந்தரும் 1933 முதல் 1938 வரை நாவலர் சோமசுந்தர பாரதியாரும் தமிழ்த்துறைத் தலைவர்களாக விளங்கினர். ச.சோ. பாரதியின் உற்ற மாணவராக வெள்ளை வாரணனார் திகழ்ந்தார். இவர்தம் பேராசிரியர்களாக இருந்தவர்களில் பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப்புலவர், ஆர். கந்தசாமியார், தி.பொ. பழநியப்பப் பிள்ளை, இரா. இராகவையங்கார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். இரா.பி. சேதுப்பிள்ளை போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களின் புலமையும் ஆற்றலும் இவர்தம் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தன எனலாம்.
1935ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக ஐந்தாண்டுகள் கல்வி பயின்று வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். தொல்காப்பியம் நன்னுரல் எழுத்ததிகாரம் என்ற ஒப்பீட்டு நூலை 1935-1937 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எழுதி முடித்தார். இந்நூல் (The Journal of Annamalai University) orgrp @ggjab 1941 (pg. 6b Gigm frg, வெளியிடப்பட்டது. பின்னர் 1962இல் நூல் வடிவம் பெற்றது.
1938ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா நடைபெற்றது. அதன் தலைவராக இருந்தவர் த.வே. உமா மகேசுவரனார். விழாவிற்குத் தலைமை தாங்கியவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள். ச.சோ. பாரதியின் சொல்லுக் கிணங்க க. வெள்ளைவாரணனார் கலந்து கொண்டு தொண் டாற்றினார். பின்னர் தலைவரால் ஈர்க்கப்பட்டார். கரந்தைத் தமிழ்ச் சங்க கல்லூரிக்கு 30.6.1938 அன்று ச.சோ. பாரதியின் பரிந்துரையினால் வெள்ளைவாரணனார் விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டார். 1943வரையில் அக்கல்லூரியில் பணிபுரிந்தார்.