உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தொல்காப்பியம்-நன்னூல்



2. இயல்பாவன

   அல்வழியில் வல்லெழுத்து மிகாது இயல்பாகும் உயிரீறு களை யுணர்த்தப் போந்த தொல்காப்பியனார்,
     அன்ன வென்னும் உவமக் கிளவியும் 
     அண்மை கட்டிய விளிநிலைக் கிளவியும் 
     செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும் 
     ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் 
     செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும் 
     செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும் 
     அம்ம வென்னும் உரைப்பொருட் கிளவியும் 
     பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட 
     அன்றி யனைத்தும் இயல்பென மொழிப. (தொல்,210) 

எனவரும் சூத்திரத்தால் அகரவீற்றுள் இயல்பாவனவற்றை உணர்த்தினார்.

   (இ-ள்) அன்ன வென்று சொல்லப்படும் உவம வுருபாகிய இடைச் சொல்லும், அண்மையிலுள்ளாரை அழைக்கும் விளி யாகிய நிலைமையையுடைய அகரவீற்று உயர்தினைப் பெயர்ச் சொல்லும், செய்ம்மன என்னும் வினைச் சொல்லும், ஏவலைக் கருதிய வியங்கோளாகிய அகரவீற்று வினைச்சொல்லும், செய்த வென்னும் பெயரெச்சமாகிய வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினையெச்சமாகிய வினைச் சொல்லும், உரையசைப் பொருண்மையினையுடைய அம்மவென்னும் இடைச்சொல் லும், பன்மைப் பொருளில் வரும் அகரவீற்றுப் பலவறி சொல்லு மாகிய அவ்வனைத்தும் (வருமொழி வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்பதாம்.
   (உ-ம் பொன்னன்ன குதிரை, செந்நாய், தகர், பன்றி,
           ஊர, கேள், செல், தா, போ
   உண்மன       குதிரை,     செந்நாய்,     தகர்,    பன்றி

    செல்க            "               "              "          "

     உண்ட           "               "              "          "

(எதிர்மறை உண்ணாத ” " " "

   (குறிப்பு) நல்ல      "              "             "           "
   உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், போயினான்; 
   
   அம்ம கொற்றா, சாத்தா, தேவா, பூதா,
   பல குதிரை, செந்நாய், தகர், பன்றி;