உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் மயங்கியல் 167

   புலிபோலப் பாய்ந்தான், கொள்ளெனக் கொண்டான், ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி, என முறையே, உவமச் சொல்லும், எனவென் எச்சமும், ஆங்கவென்னும் உரையசையு மாகிய அகர வீற்றிடைச் சொல்முன்னர் வல்லெழுத்து மிக்கன.
   இனிக் கொண்டான், அணிக்கொண்டான், துணிப்பதக்கு என இகர வீற்றுள் எடுத்தோதியனவற்றுள் வல்லெழுத்து மிக்கன.

   மீக்கோள், மீப்போர்வை என்பன வல்லெழுத்து மிக்கு உடன் நிற்கும் மொழிகளாம். உண்ணுக்கொற்றா, உண்ணுரச் சாத்தா என ஊகார வீற்று முன்னிலைக்கண் வல்லெழுத்து மிக்கன.
   இங்ஙனம் உயிரீற்றுச் சொற்களிற் பெரும்பாலன வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலையுணர்ந்த நன்னூலார், இவ்விதிகளெல்லாவற்றையும் தொகுத்து,
     இயல்பினும் விதியினும் தின்ற வுயிர்முன் 
     கசதப மிகும்வித வாதன இன்னே.   

என ஒரே சூத்திரத்திற் பொதுவிதியாக அடக்கிக் கூறினார்.

   இனி அல்வழியில் அகரவீற்று ஈரெழுத்தொருமொழி யாகிய பல, சில என்பன தம்முள் தாம் வருமிடத்து வல் லெழுத்துப் பெற்றும் இயல்பாயும் வருவன. இவ்வுறழ்ச்சி முடியினை,
     வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும். (தொல்.215) 

என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.

   (உ-ம்) பல பல, சில சில எனவும், பலப்பல, சிலச்சில எனவும் வரும். பல, சில என்னும் இவ்விரு சொல்லும், தம்முன் தாம் வருமாயின் இயல்பாகலும், மிகுதலும் நிலைமொழியீற்று அகரம் கெட லகரம் றகரமாதலும், இவற்றின் முன் பிற மொழிகளுள் யாதானு மொன்றுவரின் அகரம் நிற்றலும், நீங்கலும் ஆகிய இவ் வேறுபாடுகள் வழக்கிலும் செய்யுளிலும் பெருகின. இவற்றை நன்னூலார்,
     பலசில வெனுமிவை தம்முன் தாம்வரின் 
     இயல்பு மிகலும் அகரம் ஏக 
     லகரம் றகர மாகலும் பிறவரின் 
     கரம் விகற்ப மாகலு முனபிற. (நன்.170)

என்ற சூத்திரத்தில் தொகுத்துக் கூறியுள்ளார்.