இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி மயங்கியல் 193
மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. (தொல்,312)
இதன் பொருள்:- (நிலைமொழியீற்று மகரம் வேற்றுமைக் கண் கெட்டவிடத்து) வருமொழி வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து மிக்குமுடியும் மொழிகளும் உள என்பதாம்.
(உ-ம்) குளங்கரை, சேறு, தாது, பூழி
குளக்கரை, " " " எனவரும்.
நும் என்னும் விரவுப்பெயர் பொருட் புணர்ச்சிக்கண் மகரங்கெட மெல்லெழுத்து மிக்குமுடியும் என்பது,
நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே. (தொல். 325 என்பதனாற் கூறப்பட்டது.
(உ-ம்) நுங்கை, செவி, தலை, புறம் எனவரும்.
இவ்வாறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் நிலைமொழி யீற்று மகரம் கெட்டு முடிதலை,
வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும் அல்வழி உயிர்இடை வரின்இயல் புல்உள. (நன்.220)
எனவருஞ் சூத்திரத்தால் எடுத்துரைத்தார் நன்னூலார்.
ஆயிரம்’ என்னும் மகரவீற்று எண்ணுப் பெயர்முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வந்து புணருமிடத்து, மகர வீற்று வேற்றுமையோடு ஒத்து இறுதி மகரம்கெட, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,
அளவும் நிறையும் வேற்றுமை யியல. (தொல்.319)
எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடப் பெற்றது.
(உ-ம் ஆயிரம்+கலம்=ஆயிரக் கலம், சாடி, தூதை, பானை எனவும் ஆயிரம்+கழஞ்சு-ஆயிரக்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.
மேல் (தொல்-எழுத்து 310) துவர எனற் இலேசினால் இயல்பு கணத்துக்கண் எய்திய மகரக்கேடு ஈண்டுங் கொள்ளப் படும் என்பர் இளம்பூரணர்.
(உ-ம்) ஆயிரம்+நாழிசஆயிரநாழி, வட்டி, அகல் என வரும். “பதினாயிரக்கலம் என்றாற்போன்று ஆயிரம் என்ற சொல் அடையடுத்து வந்துழியும் மேற்கூறிய விதி கொள்ளப்படும்
என்பர் உரையாசிரியர்.
தொ.14