இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் மயங்கியல் 169
என வரும். பலவற்றிறுதி என்பதனால் உண்டன குதிரை, கரியன குதிரை எனவரும் அகரவீற்று வினைமுற்றையும் வினைக் குறிப்பையும் தழுவினார். அகர வீற்று அல்வழி முடிபாகிய
இதனை
செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரி னெச்சமுற் றாற னுருபே அஃறிணைப் பன்மை அம்மமுன் னியல்பே. (நன்.157)
என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.
ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியும் ஏவல் குறித்த வுரையசை மியாவும் தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ டன்றி யனைத்தும் இயல்பென மொழிப. (தொல்.224)
எனவரும் சூத்திரத்தால் ஆகார வீற்றுச் சொற்கள் இயல்பாமாறு கூறினார் தொல்காப்பியனார்.
(இ-ள்) ஆ வென்னும் பெயர்ச்சொல்லும் மா வென்னும் பெயர்ச்சொல்லும், விளித்தலையுடைய பெயராகிய உயர்தினைச் சொல்லும், யா வென்னும் வினாப்பெயரும், அஃறிணைப் பன்மைப் பொருளை யுணர்த்தும் ஆகார வீற்று முற்று வினைச்சொல்லும் முன்னிலையில் ஏவல் வினைச் சொல்லைச் சார்ந்து வரும் உரையசை மியாவாகிய ஆகாரவீற்றுச் சொல்லும், தனது தொழிலினைச் சொல்லும் ஆகாரவீற்று வினாவினையுடைய வினைச் சொல்லும் ஆகிய அவ்வனைத்தும் (வருமொழி வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர் என்பதாம்.
(உ-ம்) ஆ குறிது, சிறிது, தீது, பெரிது மா குறிது சிறிது, தீது, பெரிது ஊரா கொள், செல், தா, போ யா குறிய சிறிய, திய, பெரிய
உண்ணா குதிரை, செந்நாய், தகர், பன்றி கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா, உண்கா கொற்றா, சாத்தா, தேவா, பூதா:
எனவரும். ஆகார வீற்றியல்பாகிய இவ் வல்வழி முடியினை,
அல்வழி ஆமா மியாமுற்று முன்மிகா. (நன். 171)
என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.