இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
170
தொல்காப்பியம்-நன்னூல்
உண்ணாக் குதிரை, உண்ணாக் கிடந்தன என மிகுமேல், உண்ணாத குதிரை யெனவும் உண்டு கிடந்தன எனவும் பொருள் பட்டு, முறையே எதிர்மறைப் பெயரெச்சமும், செய்யாவென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சமும் ஆம் என்பர் சங்கர நமச்சிவாயர்.
நீயென் பெயரும் இடர்க்கர்ப் பெயரும் மீயென மரீஇய இடம்வரை கிளவியும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல்.250)
இதனால் ஈகார வீற்றுச் சொற்கள் இயல்பாமிடம் அதுகின்றார் தொல்காப்பியனார்.
(இ-ள்) நீ யென்னும் பெயரும், இடக்கர்ப் பெயராகிய பகர வீகாரமும், மீ என்று மரூஉவாய் ஓரிடத்தை வரைந்துணர்த்துஞ் சொல்லும் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.
(உ.ம்) நீ குறியை, சிறியை, தீயை, பெரியை
பீ குதிது, சிறிது, இது, பெரிது மீ கண், செவி, தலை, புறம்
என வரும். இவ்வீகார வீற்றுச் சொற்கள் அல்வழிக்கண் இயல்பாய் வரு மென்பதனை நன்னூலார்,
பல்வி நீமீ முன்ன ரல்வழி இயல்பாம், வலிமெலி மிகலுமா மீக்கே (நன்.178)
என்பதன்கண் இயல்பாம் என்பதனாற் கூறினார்.
கட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. (தொல், 257) இதனால் உகர வீற்றுச் சுட்டுப்பெயர் அல்வழிக்கண் இயல்பாமாறு கூறுகின்றார்.
(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர வீற்றுப் பெயர் முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும என்பதாம்.
(உ-ம் அது குறிது, இது குறிது, உது குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும்.
இதனோடு மூன்றாமுருபாகிய ஒடு, ஆறாமுருபாகிய அது, ஒரு இரு, அறு, ஏழு எனத்திரித்த உகர வீற்று எண்ணுப் பெயர்கள், உகரவீற்று வினைத்தொகை ஆகியவைகளையுங் கூட்டி,