பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தெரிந்தால் போதுமென்கிற அளவில் கிராமத்து மத்தியில் ஓர் ஆரம்பப் பாடசாலை இருந்தது. ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன் அதை நிர்வகித்து வந்தார்.

அவருடைய கண்டிப்புக்குப் பயந்தோ-அல்லது பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணந்தடனோ, பிள்ளைகள் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல மாட்டார்கள். கல்வியின் பெருமையையும்; படிப்பின் அவசியத்தையும் புரிந்து கொள்ளாத அவர்களில் பலர் ஆடு, மாடு மேய்க்கவும், வயல்களில் பெற்றோருக்கு உதவவும், மாலை நேரங்களில் விளையாடவும் சென்று விடுவார்கள்.

ஆனால், அவர்கள் அனைவரும் பொழுது சாய்ந்ததும் ஊரின் கோடியிலுள்ள பாழடைந்த மண்டபத்தில் ஒன்று கூடத் தவற மாட்டார்கள்.

ஒவ்வொருவரும், தங்கள் தங்களது தாத்தா, பாட்டி கூறிய விக்கிரவாதித்தன் கதை; வேதாளம் சொன்னகதை நல்லதங்காள் கதை; மதன காமராசன் கதை ஆகியவற்றிற்கு கண், காது மூக்கு வைத்து தங்கள் மனம் போனபடிக் கூறுவார்கள். இப்படிக் கதை கேட்பதிலும்; பிறருக்குக் கூறுவதிலும் அந்தச் சிறுவர்களுக்கு அலாதி குஷி.

ஆனால்–