உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
123

உங்கள் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்ப்பவர் களாக விளங்க வேண்டும். செய்வீர்களா?" என்று கேட்டான்.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடி உங்கள் வார்த்தைப் படியே நாங்க எல்லோரும் நல்லாப் படிச்சு, பெரிய பெயர் வாங்குவோம்" என்று ஏதோ சத்தியம் செய்வது போல் உறுதியோடு கூறினார்கள்.

அதைக் கேட்ட தேவகுமாரர்கள் மிக்க மகிழ்ச்சியோடு அவர்களிடம் விடை பெற்றபோது 'அப்படியானால் இனிமே நீங்க எங்களைப்பார்க்க வரமாட்டீங்களா?” என்று குரல் தழு தழுக்கக் கேட்ட கண்ணப்பனிடம் உலகநாதன் அன்பொழுக, "நீங்கள் எல்லோரும். எங்களை எப்போது பார்க்க வேண்டு மென்று நினைத்தாலும் நாங்கள் வருவோம். ஆனால் பெரிய பரீட்சை முடிந்து, லிவ் விட்ட பிறகு தான் நீங்கள் எங்களை நினைக்க வேண்டும்" என்கிற நிபந்தனையுடன். தேவகுமாரர்கள் சிரித்தபடி அவர்களிடம் விடைபெற்றுச் சென்றனர்.