உதாரணத்திற்கு உங்களுக்கு ஒன்றை விளக்குகிறேன் என்று கூறிய தென்றலழகன் அழகப்பன் பக்கம் திரும்பி, அழகப்பா உன் கையிலிருக்கும் டிரான்ஸிஸ்டரை இப்படிக் கொடு” என்று கேட்ட போது-நான் மடியில் மறைத்து வைத்துக்கொண் டிருப்பதை தேவகுமாரன் எப்படிப் பார்த்தான்?என்று வியந்து கொண்டே அதைத் தென்றலழக னிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக் கொண்ட தேவகுமாரன், விசையைத் திருப்பினான். இனிய சங்கீதம் ஒலித்தது. உடனே அதை நிறுத்திவிட்டு-இந்த சங்கீதத்தை இங்கு யாரும் பாடவில்லை-பெட்டி யினுள்ளும் யாரும் இருக்க முடியாது. ஆனால் இதை எங்கோ, யாரோ பாடுகிறார்கள்-அந்த ஒசையை ஒலி அலைகள் மூலமாக விண்வெளியில் கலக்கிறார்கள்; அந்த அலைவரிசையை இந்த ரேடியோ பிரித்து எடுத்து குறிப்பிட்ட இசையை நமக்குத் தருகிறது.
சற்று முன்பு வரை சென்னையில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் வர்ணனையை நேரில் பார்ப்பதுபோல் கேட்டு சித்துவிட்டு அழகப்பன் வந்திருக்கிறான். அதில் இந்தியா வெற்றி பெறாது போனதில் அழகப்ப னுக்கு அளவு கடந்த வருத்தம் என்று தேவ குமாரன் அருகில் இருந்து பார்த்தது போல் கூறக்-