பக்கம்:மாணவர்களுக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இ. எது உயர்வு?

நம் நாட்டிலும் சரி, வெளி நாட்டிலும் சரி மக்கள் எதை எதையோ உயர்வு என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். புறநானூறு என்ற இலக்கியம் கூறுகிறது. "நல்ல வழியிலே பொருளைத் தேடி, சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, எஞ்சிய் பொருளைச் சேமித்து வைத்து, அதையும் அறஞ்செய்ய எண்ணி, தகுதியுடையவர்களைப் பார்த்து "ஐயா! இப்பொருளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கொடுப்பதுதான் உயர்வு" என்கிறது. இதைவிட வேறு உயர்வு இல்லையா? என்று கேட்கும் பொழுது, அப்படிக் கொடுக்கப்படும் பொருளையும் வேண்டாமென்று கூறி ஏற்காமலிருப்பதே அதைவிட உயர்வு என்று கூறுகிறது. எப்படி இக் கருத்து.

ஈயென இரத்தல் இழிந்தன்று-அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று-அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்பது புறநானூறு கூறும் கருத்து.

ஈ. எது உவமை?

முத்தொள்ளாயிரம் என்று ஒரு இலக்கியம் உண்டு. பெயரைப் பார்க்கும் போதே அது 2700 பாடல்களைக் கொண்டது என்று தெரிகிறது, சேரனைப் பற்றி தொள்ளாயிரம், சோழனைப் புற்றித் தொள்ளாயிரம், பாண்டியனைப் பற்றித்தொள்ளாயிரம், ஆக 2700 பாடல்களைக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/27&oldid=1267745" இலிருந்து மீள்விக்கப்பட்டது