பக்கம்:எனது நண்பர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாண்புமிகு உயர்நீதி மன்ற

நீதிபதி பு. ரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள்

முன்னுரை

கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுடைய “எனது நண்பர்கள்” புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். கி.ஆ.பெ. அவர்களுக்கு போற்றுதற்குரிய நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். அதிர்ஷ்டசாலி. அவரைவிட நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். காரணம், நாவன்மையும், நாணயமும், எழுத்தாற்றலும், இன்பத் தமிழ்பால் மாறாத காதலும், அன்பும், பண்பும் நிலைத்த கி.ஆ.பெ. அவர்கள் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்; அவருடைய ஆசிபெற்று வாழ்கிறோம். பல நுணுக்கமான விஷயங்கள், பெரியவர்களுடைய எண்ண அலைகள், கி. ஆ. பெ. அவர்களுடைய விளக்கங்கள் , ஆகியவைகளை எனது நண்பர்கள்’ புத்தகத்திலே நிரம்பப் பார்க்கிறேன்.

“பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்கவேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?” என வினாக்களை அடுக்கிக்கொண்டே வந்து, “என் தாய் அழுக்கற்றவள், என் தாய் அழுக்கற்றவள்” எனச் சொல்லி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/8&oldid=986328" இலிருந்து மீள்விக்கப்பட்டது