பக்கம்:எனது நண்பர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கலைத் தந்தை
கலைத் தந்தை

மிழகத்தில் எத்தனையோ மக்கள் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள், மறைந்தார்கள். அவர்களுள் ‘கலைத் தந்தை’ என்று அன்போடு அனைவராலும் புகழ்பெற்று வாழ்ந்த ஒரே தமிழ் மகன் கருமுத்து.

கருமுத்து

கரு பாட்டனின் பெயர்; முத்து தந்தையின் பெயர். இவ்விருவர் பெயராலும் அழைக்கப் பெற்றவரே நம் தியாகராயர். அவர் பெயர் கருப்பு, நிறம் சிவப்பு, புகழ் வெளுப்பு, உள்ளம் பச்சைக் குழந்தை உள்ளம்.

நகரத்தார்

தமிழகத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்து கோவில் கட்டி குடமுழுக்குச் செய்து அறநிலையங்கள் வைத்து அறப்பணிகள் பல புரிந்த அருங்பெரும் சமூகம் நகரத்தார் சமூகம். இச்சமூகத்தை தாங்கி நின்ற தலைசிறந்த பெருஞ் செல்வர் மூவரில் ஒருவர் நம் தியாகராசர். மற்றைய இருவரும் செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களும், கோடி கொடுத்தும் குடியிருந்த வீடும் கொடுத்த கொடைவள்ளல் கோட்டையூர் அழகப்பச் செட்டியார்