உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொடுவானம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இன்னும் திரும்பாததேன்?

    பிலகரி    ஆதி
         எடுப்பு

இன்னும் திரும்பாத தேன்?- தோழி! பொன்னீட்டி வரச்சென்ற என்னுயிர்க் காதலர்

       மேல் எடுப்பு

மின்னலும் மேகமும் என்னுயிர் வாட்டுதே!வேலி படர்முல்லையோ வேதனை யூட்டுதே !

        அமைதி

வருவார் வருவா ரென்று வழிமேல் விழிவைத்து வாடி வதங்க உயிர் ஓடாத ஓடானேன் ! பொருளை விரும்பும் நல்லோர் போக்கும் மாறிடும் போலும்! பூவையே கார்காலம் ஓடி வருகு தந்தோ- செந்தீச் சுடர்வீசும் அந்தி மயக்கினில் சேவல் பிரிந்த பெட்டை கூவலைக் கேளாரோ!பந்தி பந்தியாய்க் கொக்கு வானில் பறக்குதே ! பாவையே! கார்காலம் வந்தது வந்ததே!

         26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/28&oldid=1318616" இலிருந்து மீள்விக்கப்பட்டது