இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முறையோ தோழி?
காப்பி ஆதி எடுப்பு
இன்பம் சேர்த்த நிலவோ-இன்று துன்பம் சேர்க்குதேடி தோழி !
மேல் எடுப்பு
அன்பன் இல்லை ; தனித்தாள் ஓர்கை பார்ப்போம் என்ற ஆணவமோ திங்களுக்கே.
அமைதி
வண்ணப் பூக்கள் கொண்டை சூட்டி வாரித் தூக்கி அணைத்த ஆளன் கண்ணைக் கண்ணால் கவ்வி ஈர்த்துக் களிப்பைத் தந்து களித்த ஆளன் எண்ணில் மாசு வளர்தல் தேய்தல் இல்லை உன்றன் முகத்திற் கென்றான். உண்மை தானே ! அவனை விட்டென் உடலைத் தீய்த்தல் முறையோ தோழி! நிலவும் ஒளியும் போல என்றும் நீயும் நானும் என்ற ஆளன் நிலவிற் கில்லை குளிர்மை உன்றன் முகத்தில் நிலவும் குளிர்மை என்றான். நிலவின் குளிர்மை பகலில் எங்கே? நிலைத்திருக்கும் உண்மைதானே தலைவன் அன்றோ குற்றவாளி? தளிரைத் தீய்த்தல் முறையோ தோழி ?
25