பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னையும் கன்னியும்

பிரான்சு தேசத்தில் இரண்டு சிறுகதைகள்.

ஒன்று:

கடவுள் முதல் முதல் மனிதனைப் படைத்து இந்த பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் மனிதன் இந்த பூமியில் காலூன்றி நிற்கவில்லை கடவுள் இருக்கும் அந்த சுவர்க்க பூமிக்கே திரும்பி விடுகிறான். கடவுள் பார்க்கிறார். அந்த மனிதனை இந்த நில உலகிலேயே நிறுத்திக் கொள்ள, இன்பப் பொருள்களான பூஞ்சோலை, வண்ண மலர், இனிய பழங்கள், இசைத்தும்பி, வெள்ளருவி, நீராழி இன்னும் என்ன வெல்லாமோ கொடுத்து திரும்பவும் அனுப்பி வைக்கிறார். இவை ஒன்றும் அவன் விரும்பும் இன்பத்தை அளித்து விடவில்லை. ஆதலால் திரும்பத் திரும்ப சுவர்க்கத்திற்கே ஒடி விடுகிறான். கடைசியாக கடவுள் பார்த்தார். ஒரு பெண்ணைப் படைத்து, அந்த மனிதனுடன் இந்தப் பெண்ணையும் சேர்த்து உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவ்வளவுதான். உலகத்திற்கு பெண் துணை யோடு வந்த மனிதன் சுவர்க்கத்திற்கு திரும்பவே இல்லை. இது ஒரு கதை.

இரண்டாவது கதை:

கடவுளின் பரம விரோதியான சைத்தான் மனிதனைக் கெடுக்க எண்ணுகிறான், பூமிக்கடியில் தங்கத்தையும் வைரத்தையும் புதைத்து வைக்கிறான் மரங்களில் இருந்து மதுவை குடம் குடமாய்ப் பொழிய வைக்கிறான்.