88
கடற்கரையிலே
நாட்டுப் பள்ளிகளிலும் பரவத் தொடங்கிவிட்டது. அந்தோ! இவ்வொளியைக் குறிப்பதற்கு நல்ல தமிழ், சொல் இல்லையா? நம் முன்னோர்கள் - திரைகட லோடி, திக்கெட்டும் புகழ் பெற்றவர்கள், இதற்கு அழகிய பெயரிட்டுள்ளார்களே! அப்பெயர் மண்ணுள் மூழ்தி மறைந்தொழியலாகுமா? 'கலங்கரை விளக்கம்' என்ற அச்சொல் இன்று நேற்று எழுந்ததா? சிலப்பதிகாரத்தில் வழங்கும் செந்தமிழ்ச் சொல்லன்றோ? 'கலங்கரை விளக்கம்' என்ற சொல் இருக்க, தீபஸ்தம்பம் போன்ற பதங்களை வழங்குதல் நன்றோ?
"நீதி மன்றத்தின்மீது சுழன்று ஒளிரும் சுடர் விளக்கே ! உன்னைப் போன்ற ஒளியைக் கண்டுதான் சோதியே, சுடரே, சூழ்ஒளி விளக்கே' என்று புகழ்ந்ததோ எங்கள் அருமைத் திருவாசகம்? சிவ நெறியே சிந்திக்கும் என் உள்ளத்தில் அச்செஞ்சடைக் கடவுளின் கோலம் அன்றோ காட்சி தருகின்றது? காதவழி துரம் ஒளி வீசும் கலங்கரை விளக்கே ! வாழி.
"பாக்கங்கள் பல உடைய பட்டினமே ! கடற்கரையில் அமைந்த சிற்றுாரைப் பாக்கம் என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். அந்த முறையில், சென்னப்பட்டினமே! நீயும் பல பாக்கங்களை உடையாய், சேப்பாக்கம் முதல் கீழ்ப்பாக்கம் வரை எத்தனையோ பாக்கங்கள் உன்பால்
1. "சுற்றி நின்றுக டர்க்கற்றை வீசலால்
உற்று நோக்குநர் உள்ளம்ம லர்தலால்
மற்றி ராப்பொழு தத்தின்வ யங்கலால்
வெற்றி வேணியன் மேலொளிர் திங்களோ"
- பாவலர் விருந்து : பட்டினக் காட்சி.