பக்கம்:ஓ மனிதா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகம் கேட்கிறது

123

சொந்தம் கொண்டாடும் ‘யோக்கியர்கள்’ எங்கே இருக்கிறார்களோ, அங்கேதானே ‘திருடர்’களும் இருக்க முடியும்? எங்களிடையேதான் எதற்கும் சொந்தம் கொண்டாடும் ‘யோக்கியர்கள்’ இல்லையே? ‘திருடர்கள்’ எப்படி இருக்க முடியும்?

என்ன ஆராய்ச்சியோ உங்கள் ஆராய்ச்சி!

இந்த அழகான ஆராய்ச்சியை ‘உண்மை’ என்று நிரூபிப்பதற்காகவோ என்னவோ, உங்களில் ஒருவர் என்னை வைத்து ஒரு கதை கட்டி விட்டுவிட்டார். ஒரு நாள் ஒரு செட்டியார் கடையிலிருந்து ஒரு வடையைத் திருடிக் கொண்டு வந்து நான் மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டேனாம். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த ஒரு நரி என்னிடம் வந்து, ‘காக்கா காக்கா, இவ்வளவு அழகாயிருக்கிறாயே! உன் வாயைத் திறந்து ஒரு பாட்டு பாடேன்?’ என்றதாம். உடனே நான் உச்சி குளிர்ந்து, ‘கா, கா’ என்று பாட, வாயிலிருந்த வடை கீழே விழ அதைக் கவ்விக்கொண்டு ஓட்டம் பிடித்ததாம் நரி, நான் ஏமாந்து போனேனாம். இப்படி ‘வஞ்சகப் புகழ்ச்சியால் பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் கலை’தான் உங்களிடையே ‘காக்கா பிடிக்கும் கலை’யாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்; இல்லையா?

அந்தக் கலையும் உங்களில் சிலருக்குத்தான் கை கொடுக்கிறது; சிலருக்குக் கை விரித்து விடுகிறது.

ஓர் அவசரத் தேவை—உங்கள் நண்பர்களில் யாரிடமாவது போய்க் கை மாற்றாக ஒரு பத்து ரூபா வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். அதற்காக நீங்கள் முதலில் நுழையும் வீடு ஒரு பாடகரின் வீடாயிருக்கிறது “வணக்கம், வணக்கம். நேற்று உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/126&oldid=1371382" இலிருந்து மீள்விக்கப்பட்டது