பக்கம்:கடற்கரையினிலே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரிதிமாற் கலைஞர்

89


உள்ளன. இன்னும் உன் பக்கத்திலுள்ள எத்தனை பாக்கங்களை நீ நாளடைவில் இணைத்துக்கொள்வாயோ? எத்துணை நலங்களைப் பிணைத்துக் கொள்வாயோ? உன் பெருமை யெல்லாம் தமிழர் பெருமை ! உன் வாழ்வெல்லாம் தமிழர் வாழ்வு ! ஆதலால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க நன்னகரே !

"வெள்ளையர் ஆளும் விரிநகரே! நின் கோட்டையின் அருகே இரவெல்லாம் அரவம்; சட்டைக்காரரின் கூட்டம்[ வெள்ளைக்காரரின் வெறியாட்டம். இவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை!

"வெள்ளைக் காரர்கள் பற்பலர் மிக்கஉல் லாசக்
கள்ள ருந்திய படைஞர்கள் கவினுற உலவ
எள்ளி னும்பிறர் அதைச்சிறி தேனும் எண் ணுகிலாக்
கொள்ளி வாய்ப்புகைச் சுருட்டினர் ......"

உன்பால் வந்து குழுமுகின்றார்கள். நல்லார் அவ்வழிச் செல்லவும் நாணுகின்றனரே !சென்னை மாநகரே ! வெள்ளையரால் நீ அடைந்த சிறுமையெல்லாம் சொல்லத்தான் படுமோ? சிந்தைக்கினிய, செவிக்கினிய செந்தமிழ்ப் பெயர்களை அவர்கள் சிதைத்துவிட்டார்களே ! திருவல்லிக்கேணி என்பது எத்துணை அழகான பெயர் ! அல்லி மலர் பூத்த குளத்தைக் காண்பது ஒர் ஆனந்தமன்றோ? அக்குளத்தின் அருகே எழுந்த ஊரை 'அல்லிக் கேணி' என்று அழைத்தனர் நம் முன்னோர். அது, திரு என்னும் அடைபெற்றுத் 'திருவல்லிக்கேணி'யாயிற்று. இத்திருப்பெயரைத் 'திரிப்பிளிக்கேன்' ஆக்கிவிட்டார்களே வெள்ளையர் ! அப்பாழான பெயர், நகரம் எங்கும்,


★ பாவலர் விருந்து : பட்டினக் காட்சி


7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/91&oldid=1247693" இலிருந்து மீள்விக்கப்பட்டது