பக்கம்:ஓ மனிதா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



15. குயில் கேட்கிறது

ப்பொழுது விடிவதற்கு முன்னலேயே நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்களே, எங்கள் குரலோசையை?

க்வா, க்வா, க்வா, க்வா...

க்கூவ், க்கூவ்..

இது வசந்த காலமல்லவா? இதுதான் நாங்கள் இணை சேரும் காலம். அப்படியென்றால் இன விருத்திக் காலம்.

இந்தக் காலத்தில் நாங்கள் ஒரே ஜாலியாயிருப்போம். அந்த ஜாலியை முழுக்க முழுக்க அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வைக்கும் முட்டையைக்கூடக் காக்கைகள் ஏமாறும் சமயம் பார்த்து அவற்றின் கூட்டில் வைத்து விடுவோம். ஏமாந்த காக்கைகள் தங்கள் முட்டைகளோடு எங்கள் முட்டைகளையும் சேர்த்து அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகள் வளர்ந்ததும் எங்கள் குஞ்சுகள் எங்களைத் தேடி வந்துவிடும்.

இதனால் நீங்கள் வைத்த ஒரு சிறப்புப் பெயர்கூட உண்டே எங்களுக்கு, ‘சோம்பேறிப் பறவைகள்’, என்று.

நீங்கள் மட்டும் பிள்ளையை வளர்க்கத் தாதியைத் தேடலாம். நாங்கள் தேடக்கூடாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/109&oldid=1371296" இலிருந்து மீள்விக்கப்பட்டது