இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இனிக்கும் பாட்டுப் பாடுவேன்!-காலே
எழுச்சிப் பாட்டுப் பாடுவேன்!
கணிபி ழிந்த சாற்றைப் போலக்
காதில் இனிக்கப் பாடுவேன்!
குயிலைப் போலப் பாடுவேன்!-சின்னக்
குருவி போலப் பாடுவேன்!
அயலில் ஒடும் அருவி போல,
ஆற்றைப் போலப் பாடுவேன்!
வண்டு போலப் பாடுவேன்!-தேன்
வண்டு போலப் பாடுவேன்!
உண்டு றங்கிக் கண்வி ழித்த
உடன்எ ழுந்து பாடுவேன்!