பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயகம் பிள்ளை

57


வேண்டுமென்றும், மாதா பிதா குரு தெய்வம்-இவர்களிடம் அன்பும் பணிவும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்றும் [1]பெண்மதி மாலை கூறுகின்றது.

பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்பதைப் பல கட்டுரைகளாலும் எடுத்துரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண்மானம் முதலிய கட்டுரைகள் பெண்மதி மாலையிற் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதற்குள்ள நியாயங்களைப் பெண் மானம் என்னும் வியாசம் விளக்குகின்றது.

வேதநாயகர் கதை நூல்களும் சில இயற்றினார். அவற்றுள் தலை சிறந்தது பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் கற்பனைக் கதையே யாகும். அதுவே தமிழில் எழுந்த முதல் நவீனக் கதை (நாவல்) என்று சொல்லப்படுகின்றது. பிரதாபன் கதை நகைச் சுவை நிரம்பியது; படிப்போர் மனத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் பண்புடையது ; மூடப்பழக்க வழக்கங்களே ஒழிப்பது; நல்ல பழக்கங்கள் பரவ வழிகாட்டுவது;


  1. மதியிது மதியிது பெண்ணே-புண்ய
    வதியல்ல வோநல்ல மகராஜி கண்ணே

    வேலைக்கு நீ சிணுங்காதே-ஒரு
    மூலக்குள் புகுந்து நீ-முணுமுணுக்காதே —மதி
    வீட்டுக் கதிபதி நீயே-வெளி
    நாட்டுக் கதிபதியுன்-நாயகன் சேயே — மதி

    புண்ணியம் செய்யலாம் நாளை என
    எண்ணி யிராதே—இது நல்ல வேளை —மதி