பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அகராதி ஆசிரியர்


பல சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழில் வந்து வழங்கும் வடமொழிச் சொற்கள் உடுக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன[1]. அன்றியும் ஒவ்வொரு சொல்லின் பொருளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கப்பட்டிருத்தலால் அவ்வகராதி தமிழ் நாட்டில் வர்த்தகம் செய்த ஆங்கில நாட்டார்க்கும், கிருஸ்து மத போதகம் செய்த அறிவாளர்க்கும் பெரும் பயன் விளைப்பதாயிற்று.

பாப்ரீசியரது அகராதியின் பயனறிந்த அறிஞர் சிலர் மேலும் அத்துறையில் ஊக்கமுற்று உழைப்பாராயினர். அன்னவருள் முன்னின்றவர் ராட்லர் என்னும் நல்லறிஞர். அவர் தமிழாசிரியர்களின் உதவி பெற்றுப் பல்லாண்டுகளாக உழைத்து முப்பத்தேழாயிரம் தமிழ்ச் சொற்களைத் தொகுத்தார்; அவற்றை நான்கு பாகங்களாக வகுத்து அச்சிடத் தொடங்கினார். இரண்டாம் பாகம் அச்சாகும் பொழுது அவர் வாழ்நாள் முடிவுற்றது. அவர் எடுத்த பணியைத் தொகுத்து முடிக்க முன்வந்தார் டெயிலர் என்னும் அறிஞர். ஆயிரத்து. நானூறு பக்கங்கொண்ட பேர் அகராதியாக அது வெளிப்பட்டது.

அதற்கு இருபதாண்டுகளுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க சங்கத்தார் இன்னும் விரிவான அகராதி யொன்று வெளியிடவிரும்பினர். அவர்கள்


  1. "Asterisks are used as the sign of Grandam words -- become usual in-the Malabar {Tamil) language“
    -Preface to the Dictionary