பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ... " 禦。鷺鷺 ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்வதற்காக, சில ஏடுகளைக் கீழே: வைத்து அவற்றில் சில கோடுகளைக் கிழித்துக் கொண் டிருந்தார். ஆளுல். மார்சேல்ஸ் என்ற தளபதிக்கு ஆர்கிமிடிஸ்மேல் கோபமில்லே. ஏனெனில் இப்படி ஒரு அருமையான விஞ்ஞானி நமக்குக் கிடைக்கவில்லையே என்றெண்ணி, எப்படியும் அந்தப் பேரறிஞனேக் காணவேண்டும், அழைத்து வா ?? என்று ஓர் போர் வீரனே அனுப்பிவைத்தான். அந்தப் போர் வீரன் அவரைத் தேடினன்; தேடினன், அந்த சைர்கள் நகரத்தில் முழுதும் தேடினன். அவர் விட்டை யாரும் காட்டவில்லை. ஏனெனில், தேடுபவன் எதிரியாயிருப்பதால் ஏதாவது விபத்து அறிஞனுக்கு நிகழக் கூடுமோவென்று அனைவரும்,அவர் வீடு எங்கே இருக்கிறதென்று தெரிந்தவர்கள் கூட, சொல்ல மறுத்துவிட்டார்கள். இறுதியில் வந்த போர் வீரன் எப்படியோ வீட்டைக் கண்டு பிடித்துவிட்டான். அவன் கண்டது ஆர்கிமிடிஸ் என்ற பேரறிஞனைத்தான். ஆல்ை, அவன் நம்பவில்லை. காரணம் அவன் கேள்விப் பட்டதற்கும், அவருடைய எளிய தோற்றத்திற்கும் அவ்வளவு வேறுபாடிருந்தது. இறுதியில் இவர்தான் என்று கண்டு "இதோ பாரும், எங்கள் தலைவர் உம்மைக் கூப்பிடுகிருர், என்ைேடு வாரும் என்று பலமுறை கூப்பிட்டான். அவர் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், இவன் அழைப்பது அவர் காதில் விழவில்லே. : கடைசியில் தட்டி, என்ன நான் சொல்வது கேட்க வில்லையா? எழுந்து வாரும் என்று அதட்டினன். போ, போ’ எனக்கு வே8லயிருக்கிறது?’ என்று மீண்டும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். ஆத்திரங்கொண்ட படை வீரன் கத்தியால் குத்திவிட்டான். கீழே சாய்ந்துவிட்டார். முடிந்தது சிசிலி என்ற தீவு பெற்றெடுத்த பேரறிஞனும், பல அற்புதங்களைச் செய்து நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருந்த வருமான ஆர்கிமிடிசின் வாழ்வு, மக்கள், மன்னன், சீடர்கள்