உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ.சண்முகம் 34

தங்கமே தங்கம்!

பன்னூறு ஆண்டுகட்கும் மேலாகத்

தொடர்ந்தே

பாரிடையே - நாடெதிலும் சமூகத்தின்

நோக்கில்-

பொன்னுக்கோர் `தனிமதிப்பு´

வளர்ந்துவரும்விந்தைப்

பொருளியலை உய்த்துணர்வார்

காணுகின்றஉண்மை!

மன்னர் முதல் மக்கள் வரை

தங்கமெனும்அந்த

மாயமகள் பூசைக்கே ஆவியுடல் ஈந்தார்!

பின்னெழுந்த கொடுங்கோலர் கொள்ளையருங் கூடப்

பெரும்பொன்னைகுவித்துத்தான்ஆட்டமெலாம்

போட்டார்!

அடிமையெனும் தளைமுறிக்க

எழுந்தவர்க்கும்கூட

அப்பொன்னே திரைமறைவில்

வெடிமருந்தாய்ஆச்சு!

மிடிமையினை மன்பதையில்

பரவலாகவிதைத்தே

மேட்டுக்குடி தலைக்கொழுப்பாய்

பூட்டறையில்நுழைந்தே

படிப்படியாய் வாணிபத்தின்

குருதிஎனஆச்சு!

பணப்புழக்கச் செலவாணித்

செயல்முறையார்அரசின்

'கடிவாளம்' என்னுமொரு விபரீதத் தகுதி

காலத்தால் பொன்னுக்கே

வந்தடையலாச்சு!