உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சீனத்தின் குரல்


துறையில் முன்னேற்றமடைந்து மக்களுக்கு நல்வாழ்க்கையளிக்க வேண்டுமென்பவைதான் இந்த மறுமலர்ச்சி இயக்கத்தின் ஜீவாதாரமான கொள்கைகளாக இருந்தன. இதை ஷேக் சீன நாடு முழுதும் பரப்பினார்.

1923-ல் கொமிங்டாங் கட்சி இரண்டாவது, புரட்சியை நடத்துகிறது. இந்த புரட்சியில்தான் கம்யூனிஸ்ட் கட்சி கொமிங்டாக் கட்சியோடு ஒத்துழைக்கிறது. அதோடு ஒத்துழைத்தது மட்டிலுமல்ல கொமிங்டாங்கட்சியை வலுப்படுத்துகின்றார்கள் கம்யூனிஸ்ட்வாதிகள்.

புரட்சி அரசாங்கம்

இந்த புரட்சியின் பயனாக 1923 ஜனவரி திங்கள் 23-ம் நாள் காண்டன் நகரத்தில் புரட்சி அரசாங்கசம் அமைக்கப்படுகிறது. கொமிங்டாங் -கம்யூனிஸ்டு ஆகியோரின் கூட்டு சர்க்கார் அமைகிறது. மஞ்சு சர்க்கார் மரண கீதம் பாடிவிட்டது. இனி மக்கள் இதயப் பூங்காவில் பொது உடமைப் பூக்கள் பூத்துக் குலுங்கி அதன் வாசம் நாடு முழுதும் பரவும் என நம்பினர். இந்த எண்ணத்தோடுதான். ஷேக் ரஷ்யாவுக்குச் சென்று அங்கிருக்கும் அரசியல், முறைகளையும் - புரட்சியினால் ஏற்படுகிற பலாபலன்களையும், புரட்சிக்குத் தொடக்கத்தில் என்னென்ன தேவை என்பதை நேரில் கண்டு எந்த நாட்டிலும் புரட்சி ஏற்படுவதானால் முதன் முதலில் இராணுவம்தான் தேவை என்ற முடிவுக்கு வந்தார். அவர்