உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

63


திருக்கின்றார். இங்கேதான் தன் சிற்றன்னையைப் பற்றி மிக உருக்கமான சொற்களை வெளியிடுகின்றார்.

"என்னை என் சிற்றன்னை கடுமையாக நடத்தியதாக பலர் ஆத்திரமடைந்தனர். இப்போது நான் இராணுவத்தில் இவ்வளவு கடுமையான வேலை செய்வதற்கு உதவியாக இருந்தது, என் இளமையில் வருங்கால தீர்க்க தரிசனத்தோடு பழகியது தான்,"என்கிறார்.

புரட்சி சங்கம்

சன்-யாட்-சன் அவர்களால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சங்கம், அரசாங்க அனுமதி கிடைக்காத காரணத்தால் புரட்சி சங்கமாக மாறியதையும் முன்பு குறிப்பிட்டிருக்கிறோம். அது நாளடைவில் வளர்ச்சியடைந்து கொமிங்டாங் கட்சி என்று பெயர் பெறுகிறது. இது முழுதிலும் அரசியல், நோக்கங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால், சமூக சீர்திருத்தச் சங்கம் ஒன்று தேவைப்படுகிறது. சியாங்கே ஷேக்-ஒரு பக்கம் தன் அரசியல் ஆசானுக்குத் துணையாக - கோயிங்டாங் கட்சியை வளர்த்துக்கொண்டு, மற்றோர் பக்கம் 'நவஜீவன்' என்ற பெயரால் ஒரு மறுமலர்ச்சி இயக்கத்தையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டு வருகின்றார். சமுதாய சீர்திருத்தமும், பழைய கலைகளைத் திருத்தி தற்காலத்துக்கேற்ற முறையில் அமைத்துக் கொள்வதும், விஞ்ஞானத