பக்கம்:சீனத்தின் குரல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சீனத்தின் குரல்


மண்ணின் எட்டாவது கூரில் இருக்கும் 5 கோடி கிருமிகளைப் போன்றவர்களா ஜப்பானியர்கள் என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார். பேசவந்த பேராசிரியர் தலை குனிந்து வெளியேறினார். இந்தச் செய்தியறிந்த ஜப்பான் மனக்கலக்கமடைந்தது. எனினும் இளைஞன் தைரியத்தை அதனால் போற்றாமல் இருக்க முடியவில்லை.

1907-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஷின்போ -கோகியோ , Shinbo-Kokio என்னும் இடத்திலிருந்த இராணுவ கல்லூரியில் சேர்ந்து பீரங்கிப்படை தளகர்த்தனாவதற்கு படித்தார். அங்கே படித்து கொண்டிருக்கும் போதுதான் 1910-ல் Tung-Meng-Uhi டங்-மெங்-ஹி என்ற சீனப் புரட்சி சங்கத்தில் டாக்டர் சன்-யாட்சன் பேசியதை முதன் முதலில் கேட்டார். பிறகு அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசினர்.

புரட்சித் தொடக்கம்

1911-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி சீனப் புரட்சியின் முதல் நாள், புரட்சியுகம் பிறந்து விட்டது. இம்முறை யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு புரட்சி பூகம்பம் அதிருகிறது. இதை டோக்கியோவிலிருந்து அறிந்த சியாங் - கே ஷேக் ஜப்பான் இராணுவ கல்லூரியிலிருந்து விடுமுறைப் பெற்றுக்கொண்டு தாய்நாட்டுக்கு வந்து புரட்சியில் இரண்டறக் கலந்துவிட்டார். இந்த ஆண்டுகளிலெல்லாம் சன் யாட் சன்னுக்கு உதவியாக இருந்-