பக்கம்:சீனத்தின் குரல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

61


இராணுவ கல்லூரி

இதையறிந்த ஷேக் ஜப்பானிலுள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று ஜப்பானுக்குச் சென்று கல்லூரிக்கு மனு போட்டார். மனு தள்ளப்பட்டது. கல்லூரியில் சேர ஜப்பான் சர்க்கார் ஷேக்கை அனுமதிக்கவில்லை. ஏனெனில் சைனாவிலிருந்து ஜப்பான் இராணுவக் கல்லூரியில் சேர விரும்புவோர் சீன சர்க்காரின் நற்சாட்சிப் பத்திரம் கொண்டுவர வேண்டும். அது ஷேக்கிடம் இல்லை. படிக்கும்போது பின்னலை வெட்டி எறிந்த ஷேக்குக்கு நற்சாட்சிப் பத்திரம் எப்படி கிடைக்கும். ஆகவே மறுபடியும் தன் தாய் நாட்டுக்கே திரும்பி வந்து பா-ஓடிங் எனும் இராணுவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

ருசிகரமான சம்பவம்

சீன இராணுவ கல்லூரியின் ஆசிரியர்களில் ஜப்பானியர் ஒருவர் இருந்தார். ஓர் நாள் அவர் பேசத் தொடங்குமுன் கொஞ்சம் மண்ணை எடுத்து மேஜைமேல் வைத்துத் தட்டையாக சமப்படுத்தி, "இந்த மண்தான் சீன நாடு, இந்த மண்ணில் நாற்பது கோடி கிருமிகள் இருக்கின்றன. அந்தக் கிருமிகளைப் போன்றவர்கள்தாம் சீன மக்கள்" என்று கேலியாகவும் கிண்டலாகவும் சொன்னார். உடனே சியாங் - கே - ஷேக் மேஜையைத் தாவிப்பாய்ந்து, அதன்மேல் இருந்த மண்ணை எட்டு கூறாக்கி -ஜப்பானியர்கள் ஐந்து கோடி பேர், ஆகையால் இந்த