உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானம்பாடி’ 45

ததுபோல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே எழுந்த மனஸ்தாபம் சிறிது சிறிதாக நாளடைவில் வளர்ந்துவிட்டது. சனவனுக்காகப் பிடிவாத குணமுடைய சாவித் திரி தன் போக்கை மாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. மனைவியைத் தன் கொள்கைக்கு இணங்கி வரும்படி வற்புறுத்த வேண்டாம் என்கிற டிெவாதத்தையும் ரகுபதி தளர்த்தவில்லை.

இவர்கள் இருவருடைய மனஸ்தாபத்துக்கும் இடையில் லாஸ்வதி மிகவும் குழப்பம் அடைந்திருந்தாள். வலுவில் அவளாகவே சென்று சாவித்திரியுடன் பேசினலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சாவித்திரி போய்விடுவாள். ஒரு தவறும் செய்யாத தன்னிடம் சாவித்திரிக்கு என்ன கோபம் ஏற்பட் டிருக்கும் என்பது ஸரஸ்வதிக்குப் பல நாட்கள் வரையில் புரியவே இல்லை.

நாளாக நாளாக, சாவித்திரியின் கோபம் தன் மீது மட்டும் ஏற்பட்டிருக்கவில்லை, அது தன் அத்தான்் மீதும் பாயத் தொடங்கி இருக்கிறது என்பதையும் ஒரளவு ஸரஸ்வதி ஊகித்துக் கொண்டாள். நிலவு பொழியும் இரவுகளை, இளம் மனேவியைப் படைத்திருக்கும் அத்தான்் ரகுபதி, திறந்த வெளியில் சாய்வு நாற்காலியில் தனியாகக் கழிப்பானேன்?' என்று தன் மனத் தையே கேட்டுப் பார்த்தாள் ஸரஸ்வதி. அவளுக்கு அதற்கும் விடை புரியவில்லை. ஆகவே, ஒரு தினம் ஸரஸ்வதி கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கீதை படிக்கும் தன் அத்தை ஸ்வர்ணத் இனிடம் சென்று நெருங்கி உட்கார்ந்துகொண்டு, 'அத்தை' என்று மெதுவாகக் கூப்பிட்டாள். இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனதை லயிக்கவிட்டிருந்த ஸ்வர்ணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, 'நீ இங்கேயா அம்மா இருக் கிருய்? மாடியில் சாவித்திரியுடன் இருப்பதாக அல்லவோ நினைத்துக்கொண் டிருந்தேன்?' என்று வியப்புடன் கூறினுள். சாவித்திரி தூங்குகிருள் அத்தை. அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான்் இங்கு வந்தேன்' என்ருள் ஸ்ர ஸ்வதி. அவள் குரலில் ஏமாற்றமும், ஏக்கமும் நிரம்பி இருந்தன.

ஸ்வர்ணம் ம்ெதுவாகச் சிரித்துக்கொண்டே, 'உனக்கு மத்தியான்ன வேளைகளில் தூக்கமே வராதே. எதையாவது, "கொடை, கொடை' என்னு குடைந்துண்டே இருப்பாயே குழந்