170 இருளும் ஒளியும்
'யார் பேரிலே அவள் கோபித்துக்கொள்ளப் போகிருள்? நானும், ஸ்ரஸ்வதியுந்தான்் வெளியூருக்குப் போகப்போகி ருேமே. கோபமோ, சமாதான்மோ இதில் தலையிட இங்கே யாரும் இருக்கப்போவதில்லை' என்ருள் ஸ்வர்ணம்.
'இந்த விட்டுக்கு உன் சின்ன அம்மாதான்் எஜமானி. இத்தனை வருவு காலம் அத்.ை எஜமானியாக இருந்தது போதும். அத்தையம்மாவின் இடுப்புச் சாவி இடம் மாறப் போகிறது. வீட்டைச் சின்ன அம்மா பாத்துக்கு வாங்க' என்ருள் ஸரஸ்வதி.
'பாத்துக்குவாங்க! அவ்வளவு இருந்தா இவங்களைப் பிடிக்க முடியாதம்மா. வாய்க்கு ருசியா புருசனுக்குச் சமைத்துப் போடத் தெரியாட்டியும் இதிலே ஒண்னும் குறைச்சல் இல்லை போங்க! "
ஸ்ரஸ்வதியும், ஸ்வர்ணமும் ஊருக்குப் போகப் போகிரு.ர்கள் என்பதை நினைத்து வேலைக்காரப் பெண் கண் கலங்கிளுள். புது எஜமானி எப்படி இருப்பாளோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.
கார்த்திகைச் சீருடன் சாவித்திரியும், ரகுபதியும். சந்துரு வும், மங்களமும் வந்து சேர்ந்தார்கள். ஸரஸ்வதி முன்னைப் போல் ஆரத்தியுடன் ஒடிச் சாவித்திரியை வரவேற்கவில்லை! மனத்தில் தாக்கிய காயம் ஆழமாகப் போய்விட்டது. அதன் வலியை எவ்வளவுதான்் அவள் மறக்க முயன்ருலும் அது வலித் துக்கொண்டேதான்் இருந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிளவுக்கே தான்் காரணமானவள் என்று நினைத்து ஸரஸ்வதி ஒதுங்கிவிட்டாள். அவளுடன் வந்திருந்த தங்கம் சிரித்த முகத்துடன் ஆரத்தியைக் கொண்டுவந்தாள்.
'ஏதோ, கிழக்குப் பக்கமாக நில்லுங்கள்' என்ருள். "கெளரி கல்யாணமே வைபோகமே' என்று பாடினுள். எல்லோ ரும் சிரித்தார்கள். எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ, மனத்தில் திருப்தியான இன்ப அலைமோத இந்தப் புனர் கிருகப் பிரவேசம்' நடைபெற்றது.
அன்பு கனிந்த பார்வையுடன் ஸரஸ்வதியைத் தேடிய மங்களம் அவளுடன், பேசச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண் டாள். 'ஸரஸ்வதி! எங்கள் ஊருக்கு வரக்கூடாதென்று விரதம் எடுத்துக்கொண் டிருக்கிருயா? தீபாவளிக்கு வருவாய் என்று நினைத்திருந்தேன். உன் அத்தான்ுடன் வருவாய் என்று நினைத்து