உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் நீர் 159:

ஸ்ரஸ்வதியின் பேச்சுக் குரலேக் கேட்டு அலமு உள்ளிருந்து முற்றத்துக்கு வந்தாள். வந்தவள் திகைப்பும், பயமும் ஒருங்கே அடைந்தவளாக, "நீயா வந்திருக்கிருய் .3ידט. תעיות உன் அத்தான்ேப் பார்த்தாயா? தீபாவளிக்கு ஊருக்குப் போகாமல் இங்கே வந்து உட்கார்ந்துவிட்டான். என்ன சொன்குலும் கேட்கவில்லையேடி அம்மா நான் என்ன பண்ணுவேன் சொல். மன்னிக்குத் தெரிந்தால் என்னைத்தான்் குற்றம் சொல்லுவாள். நீ என்ன சொல்லுவாயோ என்று பயந்து செத்தேன் போ' என்று ஸரஸ்வதி எதையும் கேட்பதற்கு முன்பே படபடவென்று பேசினுள் அலமு.

'அலமு. அத்தைக்குப் பயமா அதுவும் என்னிடம் ஏற்பட்ட பயமா?' என்று ஸரஸ்வதி நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.

"அவள் எல்லோரும் பயப்படும்படியாகவா இருக்கிருள்? தர்மத்தைக் கண்டு அதர்மம் அஞ்சுகிறது. சத்தியம் அசத்தி யத்தை வெல்லுகிறது. பொறுமை கோபத்தை விரட்டுகிறது. நன்மை தீமையை அழிக்கிறது. அவ்வளவுதான்்! ஸரஸ்வதியைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. நற்குணங்களைப் போற்றும் அந்தப் பெண் சாதாரணமானவள்."

ஸரஸ்வதி புன்சிரிப்புடன் அலமுவைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளே போய்விட்டாள்.