பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘டானா' முத்து/43

ரத்தினாம் பாளும் திருப்பதி போனாள்!
நித்தமும் பார்வதிக்கு பலப்பல தொல்லைகள்!
கொத்திப் பிடுங்கும் கழுகுகள் போல
எத்தனையோ ரெளடிகள் அவளை மிரட்டினர்!

பதினைந்து குண்டர்கள் பகலிலேயே ஓர்நாள்
குதிரில் உள்ள நெல்முழு வதையுமே
அதிகாரி கள்போல மிரட்டிப் பார்வதியை
உதைத்துக் கேட்டனர் உறுமினெர்! பாய்ந்தனர்!!

பார்வதி "ஐயோ"வெனப் பதறினாள்! கதறினாள்!
ஊரார் அனைவரும் தீமிதித் திருவிழாப்
பார்ப்ப தற்காகப் பக்கத்தூர் சென்றனர்!
யார்வந்து உதவுவார்? என்னதான் செய்வாள்?

திக்கற்ற பார்வதிக்குத் தெய்வமே துணையாய்
அக்கணத் திலேயே அங்கே வந்தது போல்
கொக்கரித்த குண்டர்கள் கும்மாளம் அடங்க
மிக்கவும் நல்லதோர் சம்பவம் நடந்தது!

அந்த நேரம் அற்புதம் நிகழ்ந்தது!
வந்தான் அங்கே வயோதிகன் ஒருவன்!
'தந்தணத்தான்' பாடினான்! தாடியை

உருவினான்!
அந்த ரெளடிகள் அவனையும் வளைத்தனர்!