பதிப்புரை இலக்கியத்தில் காலம்தோறும் பல புதிய வடிவங்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன. கையாளும் படைப்பாளியின் கலைப்படுத்தும் ஆற்றலுக்கேற்ப அவை வெற்றியோ தோல்வியோ அடைகின்றன. இந்த இலக்கிய வடிவங்களில் எளிமையானவற்றை தேர்ந்தெடுத்து, பலரும் பயன்படுத்தத் தொடங்கும்போது அவை பரவலான வெளிச்சம் பெறுகின்றன. கடினமான சில வடிவங்கள் கடந்த கால வடிவங்களாகி விடுகின்றன. சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் கடுமையான பல தமிழ் மரபுக் கவிதை வடிவங்கள் இத்தகைய பட்டியலில் அடங்கும். இதில் வடிவத்தை வைத்துக் கொண்டு, அதில் தனது புதிய முத் திரைகளைப் பதித் து, எளிதாக பழைய இலக்கணத்தை சற்றே உடைத்து, அதில் கவிதை வார்த்தோர் குறைவான எண்ணிக்கையிலேயே அடங்குவர். இதைத்தான் நம் மகாகவி புதியன விரும்பு என புதிய ஆத்திசூடியில் குறிப்பிடுகிறான். பழைய வடிவம், அதில் ஏற்கனவே பாடப்பட்ட பழைய 'பாடுபொருள்கள், இப்படியேதான் தமிழ்மரபுக் கவிதையின் வரலாற்றிலி சலிப் பூட்டும் சக் கைகள் நிறைந்து
பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/9
Appearance