உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாழினை நீக்கித் தோட்டம்
தமிழச்சி வந்தாள்; பந்தர்
தாழ்ந்துபூத் தலைய சைக்கும்
சம்பங்கி முல்லை கொய்தாள்;
ஆழத்துக் கிணற்று நீரை
அடுக்களை நிறைத்தாள்;தோட்ட
வாழைதெங் கிற்கு நீரை
வார்த்திட்டாள்! அந்த வேளை,

21

பக்கத்து வீட்டுக் குள்ளப்
பாப்பாத்தி வந்தாள்; சொல்வாள்: "பொக்கைவாய்க் கிழவன் கையில்
பொருளுண்டாம்;அதனால் என்னை
அக்கிழ வனுக்குத் தள்ளத்
தாய்தந்தை ஆர்ப்ப ரித்தார்;
திக்கற்று நிற்கின் றேன்நான்! இதற்கென்ன செய்வவ(து)?"என்றாள்.

22

"இன்னும்நா லிரண்டு நாளில்
திருமண மாமெ னக்கே
'பொன்,மணி எல்லாம் உன்றன்
போக்கின்போல் அழிக்க லாம்;பின்
என்னேடி குறை(வு)உ னனக்கங்(கு)?
என்கின்றாள் கொடிய அன்னை; என்காதல் உரைத்தேன்; 'சீச்சி! போடிபோ!' என்றிட் டாளே!

23